ஜோதிடவியலில் கிரகங்களின் நகர்வுப் பாதைகளான 27 நட்சத்திரங்களில் பதினொன்றாவதாகக் குறிக்கப்படும் சுக்கிரனின் நட்சத்திரம் பூரமாகும். இது வீரியத்தையும், விவேகத்தையும், ஆளுமையையும் பறைசாற்றும் சிம்ம வீட்டில் அமையப்பெற்ற முழு நட்சத்திர மாகும்.

Advertisment

காலச்சக்கரத்தின் முதல் ராசியான மேஷம், ஐந்தாம் ராசியான சிம்மம், ஒன்பதாம் ராசியான தனுசு ஆகிய மூன்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக ஜோதிடவியலில் குறிப்பிடப்படுகிறது.

அப்படிப்பட்ட மூன்று ராசிகளிலும் தனது மூன்று நட்சத்திரங்களையும் சுக்கிரன் பதித்துள்ளார். சர ராசியான மேஷத்தில் பரணியும், ஸ்திர ராசியான சிம்மத்தில் பூரமும், உபய ராசியான தனுசில் பூராடமும் பதிந்துள்ளன.

சர, ஸ்திர, உபய ராசிகளாக இருந்தாலும், இம்மூன்றுமே நெருப்புத் தத்துவத்தைக் கையாளும் ராசிகளாக அமையப்பெறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

பூர நட்சத்திரத்திற்கு சமஸ்கிருதத்தில் பூர்வ பால்குனி என்றும், கிரேக்கத்தில் லியோனியஸ் என்றும், சீனத்தில் சேங்கு என்றும், அரபில் அல்ஜிப்ரா என்றும், தமிழில் எலி, கணை, துர்க்கை, பகவதி, நாவீதன் என்றும் அழைக்கப்படுவதாக நிகண்டுகள் எடுத்துரைக்கின்றன.

இது எட்டு நட்சத்திரங்களின் தொகுப்பு.

இதன் அதிதேவதை அன்னை பார்வதியென்று கூறப்படுகிறது.

உலகசுகம் அனைத்தையுமே அனுபவித் துத் தீர்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் பதிந்த சுக்கிரனின் நட்சத்திரம் இது.

இது மனுஷ கண நட்சத்திரமென்பதால், தன் நிலையிலிருந்து மாறி தேவகணமாக உயரும் எண்ணமும், ராட்சச கனமான மூர்க்க குணத்தில் பயணிக்கும் மனோ நிலையும் உடையதாக அறியப்படுகின்றது.

Advertisment

திருப்பாவை பாடி திருமாலையடைந்த திருநிறைச்செல்வியாம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதரித்த நட்சத்திரமாகும். மேலும் சுந்தரேஸ்வரரின் திருப்பத்தினியாம் மதுரை மீனாட்சியம்மையின் ஜென்ம நட்சத்திரமும் இந்த பூரம்தான். 12 மாதங் களில் நான்கு மாதங்கள் அன்னை மீனாட்சி ஆட்சிசெய்வதாகவும், மீதமுள்ள எட்டு மாதங்களை சுந்தரேசர் ஆட்சி புரிவதாகவும் ஐதீகங்கள் குறிப்பிடுகின்றன.

பூரம் ஒரு அதிர்ஷ்ட நட்சத்திரமாக அறியப்படுகிறது. சிம்மத்தில் அமையப்பெற்ற மகம், உத்திரத்திற்கு இல்லாத சிறப்பு பூரத்திற்கு உள்ளது. ஏனென்றால் மகம் போராடிப் பெற்ற விளைவினை, உயர்வினை, புகழை பூரம் அனுபவிக்கும். அதிகாரமும், ஆளுமையும் நிறைந்த சிம்மத்தில் அமையப்பெற்ற இனிமையான நட்சத்திரம் பூரம்.

பூரத்தின் நட்சத்திராதிபதி சுக்கிரனாக வும், ராசியாதிபதி சூரியனாகவும், நவாம்ச அதிபதிகளாக பூரம் ஒன்றாம் பாதமென்றால் சூரியனும், இரண்டென்றால் புதனும், மூன்றென்றால் சுக்கிரனும், நான்கென்றால் செவ்வாயாகவும் அமையப்பெறுவார்கள்.

இந்தப் பேரண்டப் பெருவெளியில் வாழ்வில் சுகங்களை நல்கும் சுக்கிரனின் பூர நட்சத்திரத்தில் பிறப்பெடுக்கும் இவர்களின் முதல் தசை சுக்கிர தசையாக வருவதால், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இந்தக் குழந்தையின் வளர்ச்சிக்குப்பிறகு அந்தக் குடும்பம் ஒரு சிறப்பான நிலையை எட்டுவதைக் கண்கூடாகக் காணமுடியும்.

இவர்கள் ஈர்ப்பு சக்தியுடையவர்களாகவும், வாக்கு வண்மை, பேச்சில் அழகியல் கூடிய புத்திசாலித்தனத்துடன் இருப்பார்கள். எதையுமே பேசி காரியம் சாதிக்கும் நட்சத்திரமிது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கள் இயல், இசை, நாடகம் என்ற தமிழ் விளை யாடும் களங்களில் கைதேர்ந்தவர்களாக விளங்குவார்கள். இவர்களின் வம்சா வளியில் கலை சம்பந்தப்பட்டவர்கள் வாழ்ந் திருக்கக்கூடும்.

இவர்கள் அரசியல், அரசு சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள், உயர்பதவியில் இருப்பவர் களை வழிநடத்தும் வல்லமை பெற்றவர்கள் என்றால் மிகையாகாது.

உயரதிகாரத்தில் இருப்பவர்களின்மூலம் தனக்குத் தேவையான அத்தனையையும் நிறைவேற்றிக் கொள்ளும்- ஆர்ப்பாட்ட மில்லாது காரியம் சாதிக்கும் நட்சத்திரம் இது. தங்களை எப்பொழுதும் அலங்கரித் துக் கொள்வது, நேர்த்தியாகக் காட்டிக் கொள்வது, பிறரின் மத்தியில் தான் தன்னந் தனியாகத் தெரியவேண்டுமென்று பிரயத் தனம் செய்யும் வேலைகள் அத்தனையையும் செய்துகொள்ளும் நட்சத்திரம் இது. இவர்களுக்குத் திருமண உறவு அவ்வள வாக சிறப்பாக அமைவதில்லை.

பணம் சம்பாதிக்கும் ஆற்றலும், யோக்ய தையும் அமையப்பெற்றாலும், அதை செலவிடு வதில் சற்று கவனமாக இருப்பார்கள்.

dd

பூரம் ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

நவாம்சத்தில் இவர்களது சந்திரன் சிம்ம வீட்டில் அமையப்பெறும். இந்த சிம்மச் சந்திரன் அதிகாரம், ஆளுமை, புத்திசாலித்தனம், எதையும் பேசி காரியம் சாதிக்கும் துணிவு போன்றவற்றைத் தரும். இவர்களின் கல்விநிலை சிறப்பானதாக இருக்கும். இவர்களின் வம்சாவளியில் நிலம் சம்பந்தப்பட்ட நெருடல்கள் இருக்கும். அரசு, அரசியல் வழியில் ஆதாயம், அதிகாரிகளின்மூலம் உயர்வை எட்டுவது போன்ற சிறப்பினை அடைவார்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட தொழில், சீருடைப்பணி, கான்ட்ராக்ட் போன்றவை சிறப்பினைத் தரும்.

பூரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்சத்தில் புதனின் வீடான கன்னியில் அமையப் பெறும். இங்கு நட்சத்திரநாதனான சுக்கிரன் நீசமாவதனால், தங்களது பேச்சின்மூலம் சில இடர்ப்பாடுகளை சந்திக்கும் சூழல் உருவாகும். விலையுயர்ந்த நகைகளைக் கையாள்வதில் சிரமம் ஏற்படும். உணவு, இடது கண் போன்றவற்றில் சிறு நெருடல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சின்மூலம் அதீத புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவார்கள். தரகு, கமிஷன், ரெஜிஸ்டர் சம்பந்தப்பட்ட தொழில்கள், ரியல் எஸ்டேட், பத்திரப்பதிவு போன்றவை இவர்களுக்கு சிறப்பினைத் தரும். கல்வியிலும் சிறந்து விளங்குவார்கள்.

பூரம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்சத்தில் துலா ராசியில் அமையப்பெற்றிருக்கும். இது சுக்கிரனின் ஆட்சிவீடு என்பதைக் கருத்தில் கொள்ளும்பொழுது அதீத சுகம், தன்னை அலங்காரப்படுத்திக் கொள்வது, நீதியின்பால் நடப்பது, வியாபாரத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வது, அலங்காரப் பொருட்களின்மீது ஈர்ப்பு போன்றவை அமையப் பெற்றிருக்கும். இவர்களுக்கு காமம் சற்று மிகுதியாக அமைந்திருக்கும். இவர்களின் தொழில் நிலையைக் கருத்தில் கொள்ளும்பொழுது அழகு, அழகியல் சார்ந்த துறை, பியூட்டி பார்லர், அலங்காரப் பொருட்கள், துணிகள், நகைகள் சம்பந்தப்பட்ட தொழில் சிறப் பினைத் தரும். மேலும் கலைசார்ந்த படிப்புகள், ஆர்க்கிடெக்ட் போன்றவை இவர்களின் உயர்வுக்கு வழிவகுக்கும்.

பூரம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்சத்தில் விருச்சிகத்தில் அமையப்பெற்றிருக்கும். விருச்சிகத்தில் சந்திரன் தனது நிலையிலிருந்து மாறி நீசமென்ற நிலையை எட்டும்பொழுது, இவர்கள் அதிகமான குழப்பத்துடனும் முடிவெடுப்பதில் சற்று சிரமத்துடனும் இருப்பார்கள். இவர்களது சிந்தனை எப்பொழுதும் ஒரு ஓட்டத்தை நோக்கியே இருக்கும். இவர்களுக்குத் தாயாதிவழியில் சிறுசிறு இடர்ப்பாடுகளும் நெருடர்களும் ஏற்படும். உணவு சம்பந்தப்பட்ட விஷயங் களில் சற்று கூடுதல் கவனத்தைக் செலுத்த வேண்டியிருக்கும். அதிகாரம் மிகுந்த தொழில்கள், சீருடைப்பணி, விவசாயம், லேப் டெக்னீஷியன் போன்ற துறைகள் இவர்களை சிறப்படைய வைக்கும். பூர நட்சத்திரத்தின் சின்னம் கட்டில் என்று அறியப்படுகிறது. எனவே வியாபாரத் தலங்களிலும் பணிபுரியும் இடங்களிலும் கட்டில் சின்னத்தை 'லோகோ'வாகவும், அதிர்ஷ்ட சின்னமாகவும் உபயோகிப்பதன் மூலம் லாபத்தினையும் வருவாவையையும் பெருக்கிக் கொள்ளலாம்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள், மதுரை மீனாட்சியம்மன்.

விருட்சம்: பலாசு என்னும் பலாமரம்.

ரத்தினம்: வைரம்.

(அடுத்த இதழில் உத்திரம்)

செல்: 80563 79988